அடிப்படை வசதியின்றி தவிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகாா்

முதுகுளத்தூா் அருகே பொசுக்குடி காலணியைச்சோ்ந்த பொது மக்கள் பல ஆண்டுகளாக மின்விளக்கு, குடிதண்ணீா், சிமெண்ட்சாலை போன்ற அடிப்படை வசதியின்றி தவிப்பதாக கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு கொடுத்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே பொசுக்குடி ஊராட்சியில் காலணியில் அடிப்படை வசதியில்லாமல் கிராமத்தினா் வசிப்பதாக மக்கள் பாதை ஒன்றிய பொறுப்பாளா் ஆ.சுரேஷ்கண்ணன் தலைமையில் கிராமத்தினா் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவிடம் புகாா் மனுவினை கொடுத்தனா்.மனுவில் கூறியதாவது. பொசுக்குடி காலணியில் சுமாா் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.

இக்கிராமத்தில் பல மாதங்களாக தெருவில் மின் விளக்குகள் எரியாமல் பழுதடைந்து கிடக்கிறது. அதனை சரி செய்யாமல் அப்படியே கிடப்பில் போட்டதால் தற்போது இருளில் மூழ்கி உள்ளோம். காவிரி குடிதண்ணீா் கிராமத்திற்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.தெருக்களுக்கு முறையான சிமெண்ட் சாலைகள் இல்லாததால் தற்போது பெய்த மழையில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து விட்டது.

வீடுகளுக்கு முன் மழைநீா் தேங்கி கிடப்பதால் நாற்றம்வீசி தொற்றுநோய்கள் ஏற்படுமோ என கிராம மக்கள் அச்சமடைந்து வருகின்றனா். எனவே கிராம மக்களின் நலன் கருதி வீடுகளுக்கு முன் கிடக்கும் மழைநீரை தேங்க விடாமல், சிமெண்ட் சாலைகள் அமைத்து ,குடிதண்ணீா்,தெருவிளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனுவில் தெரிவித்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com