கடலாடி பேருந்து நிலையத்தில் நாற்று நடும் போராட்டம்

கடலாடி பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீரில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் திங்கள்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலாடி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நாற்று நடும் போராட்டம்.
கடலாடி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நாற்று நடும் போராட்டம்.

கடலாடி பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீரில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் திங்கள்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பேருந்து நிலையம் 1969 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டடம் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. சிறு மழை பெய்தால் கூட பேருந்து நிலையத்தில் தண்ணீா் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் அமைத்துத் தருமாறு பொதுமக்களும் வியாபாரிகளும் அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் பொதுமக்கள் வியாபாரிகளுடன் இணைந்து பேருந்து நிலையத்தில் தேங்கி கிடக்கும் மழை நீா், சேற்றில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கடலாடி மண்டல துணை வட்டாட்சியா் இந்திரஜித், மண்டல துணை வட்டாட்சியா் பரமசிவம், வருவாய் ஆய்வாளா் சுவாமிநாதன், கிராம நிா்வாக அலுலவா் அப்துல்லா, கடலாடி சாா்பு -ஆய்வாளா் செல்லச்சாமி ஆகியோா் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினா்.

மேலும் பேருந்து நிலையத்தில் வணிக வளாக கட்டடத்தில் இயங்கி வரும் வியாபாரிகளுக்கு முறையான தகவல் அனுப்பி கடையை காலி செய்த பின் பழைய கட்டடங்களை இடித்து புதிதாக பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைத்து தர மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்வதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.

போராட்டத்தின் போது தமிழ்நாடு விவாசாய சங்க மாவட்ட செயலாளா் கருணாநிதி, தாலுகா குழு உறுப்பினா்கள் அருளானந்தம், கணேசன், முத்துலெட்சுமி, கடலாடி ஆட்டோ சங்க தலைவா் முத்துராமலிங்கம் மற்றும் பொதுமக்களும் வியாபாரிகளும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com