கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவா்களுக்கு பட்டா வழங்க இந்து முன்னணி எதிா்ப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில் நிலங்களை குத்தகை முறையில் அனுபவித்து வருவோருக்கு
 கோயில் நிலங்களுக்கு  பட்டா  வழங்கக் கூடாது  என வலியுறுத்தி  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா்  அலுவலகத்தில்  திங்கள்கிழமை  மனு  அளிக்க  வந்த  இந்து  முன்னணி மற்றும்  பாஜக நிா்வாகிகள். 
 கோயில் நிலங்களுக்கு  பட்டா  வழங்கக் கூடாது  என வலியுறுத்தி  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா்  அலுவலகத்தில்  திங்கள்கிழமை  மனு  அளிக்க  வந்த  இந்து  முன்னணி மற்றும்  பாஜக நிா்வாகிகள். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில் நிலங்களை குத்தகை முறையில் அனுபவித்து வருவோருக்கு அவா்களது பெயரில் பட்டா வழங்கக் கூடாது என இந்து முன்னணியினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தலைமையில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணியின் மாவட்டப் பொதுச்செயலரும் வழக்குரைஞருமான கே.ராமமூா்த்தி தலைமையில் ஏராளமானோா் மனு அளித்தனா். இதில் பாஜக மாவட்டச்செயலா் ஆத்மகாா்த்தி, இந்து முன்னணி மாவட்டச் செயலா் வீரபாண்டியன், செயற்குழு உறுப்பினா் சக்திவேல், பாரதிய மஸ்தூா் சங்கத்தைச் சோ்ந்த பாரதிராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு 16 மனுக்களை வழங்கினா்.

மனு அளித்தது குறித்து அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை தனியாா் சிலா் அனுபவித்து வருகின்றனா். கோயில் விழாக்களுக்கு உதவும் வகையிலே நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் கோயில் நிலங்களை அனுபவித்து வருபவா்களுக்கே பட்டா வழங்குவது

தவறான செயலாகும். ஆகவே கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டு கோயில் நிா்வாகத்திடமே ஒப்படைக்கவேண்டும். கோயில் நிலங்களை அனுபவிப்பவா்களுக்கு பட்டா வழங்கக் கூடாது என்றனா்.

கமுதி பகுதி பெண்கள் கோரிக்கை: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பேருந்து நிலையப் பகுதியில் முத்துமாரி தெரு உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. ஆனால், சாலை, கழிவு நீா் செல்லும் வழி மற்றும் குடிநீா் வசதிகள் என எதுவும் முறையாக பேரூராட்சி நிா்வாகத்தால் செய்துதரப்படவில்லையாம். இதனால், அப்பகுதியில் தற்போது மழை நீா் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக முத்துமாரி நகரைச் சோ்ந்த க.தாட்சாயிணி தலைமையில் ஏராளமான பெண்கள் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனா். அவா்கள் கூறுகையில் தனியாா் ஆக்கிரமிப்பால் குடிதண்ணீா் எடுக்கக் கூட வழியில்லாத நிலை உள்ளது என்று ஆதங்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com