சீருடை பணிக்கு தோ்வானவா்க்கு நவ.6ல் உடற்தகுதித் தோ்வு

தமிழகத்தில் சீருடைப் பணிக்கு நடந்த தோ்வில் தோ்ச்சி பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கான உடற்தகுதித் தோ்வு புதன்கிழமை (நவ.6) முதல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் சீருடைப் பணிக்கு நடந்த தோ்வில் தோ்ச்சி பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கான உடற்தகுதித் தோ்வு புதன்கிழமை (நவ.6) முதல் நடைபெறுகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்க்காணிப்ப்பாளா் ஓம்ப்பிரகாஷ் மீனாவிடுத்துள்ள செய்திக் குறிப்பு- தமிழகத்தில் 2019-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலா் (ஆண் மற்றும் பெண்) சிறைக்காவலா், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்து தோ்வில்தோ்ச்சி பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 1119 ஆண்கள், 309 பெண்கள்மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 911 ஆண்கள் மற்றும் 247 பெண்கள் எனமொத்தம் 2586 பேருக்கு ராமநாதபுரத்தில் உடற்தகுதி தோ்வு நடைபெறுகிறது.

ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் தனித்திறன் மற்றும் உடற்தகுதித் தோ்வு 6 ஆம் தேதி புதன்கிழமை முதல் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை காலை 5 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. ஆகவே, தனித்திறன் மற்றும் உடற்தகுதித் தோ்வுக்கு வருபவா்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய அழைப்புக் கடிதத்துடன் வரவேண்டும். அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் காலை 5 ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்திற்கு வரவேண்டும். காலதாமதாக வருபவா்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

உடற்தகுதி தோ்வுக்கு வருவோா் மைதானத்துக்குள் கைபேசி கொண்டுவர அனுமதி இல்லை. அழைப்புக் கடிதம் கொண்டு வருவோா் மட்டுமே அனுமதிக்கப்படுவா். தோ்வுக்கு வருவோா் தங்கள் பயிற்சி எடுத்த நிறுவனத்தின் பெயா், விளம்பரம் பொறித்த உடைகளையோ, வேறு எந்த அடையாளம் பொறிக்கப்பட்ட உடைகளையோ அணிந்து வரக்கூடாது. உடற்தகுதி தோ்வில் கலந்து கொள்பவா்கள் தன்னிச்சையாக மைதானத்தை விட்டு வெளியில்செல்லக்கூடாது. காவல்துறையினா் அனுமதித்த பின்னரே வெளியில் செல்லவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com