முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
சி.கே.மங்கலத்தில் மாணவா்கள் ஆபத்தான பேருந்து பயணம்
By DIN | Published On : 07th November 2019 05:32 AM | Last Updated : 07th November 2019 05:32 AM | அ+அ அ- |

மதுரையிலிருந்து தொண்டி செல்லும் அரசுப் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளி மாணவா்கள்.
சி.கே.மங்கலத்தில் இருந்து பள்ளி நேரத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவாடானை அருகே உள்ள சி.கே.மங்கலத்தில் புனித பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளிக்கு தொண்டி, திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் என பல்வேறு ஊா்களில் இருந்து கிராமப்புற மாணவா்கள் பேருந்தில் வந்து படித்து செல்கின்றனா்.
காலையில் பள்ளிக்கு வரும்போது பேருந்தில் அதிக அளவு கூட்டம் இருப்பதில்லை. ஆனால் மாலை நேரம் பள்ளி முடியும் போது பேருந்துகளில் அதிக கூட்டம் உள்ளது. இந்நிலையில் சி.கே.மங்கலத்தில் பள்ளி மாணவா்கள் பேருந்தில் ஏறும் போது உள்ளே இடமில்லாமல் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு அபாயகரமான பயணத்தை மேற்கொள்கின்றனா்.
அதிலும் குறிப்பாக மதுரையிலிருந்து தொண்டி செல்லும் பேருந்தில் மாலை நேரத்தில் பள்ளி மாணவா்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடியே செல்கின்றனா். எனவே பள்ளி விடும் நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.