முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
திருவாடானை அருகே தூக்கிட்டு விவசாயி தற்கொலை
By DIN | Published On : 07th November 2019 05:33 AM | Last Updated : 07th November 2019 05:33 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவாடானை அருகே ஆலம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் செல்வம் (47). இவருக்கு திருமணமாகி கிராண வள்ளி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.
விவசாயியான செல்வம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாா். இதனால் அவா் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது மனைவியிடம் கூறி வந்தாராம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் செல்வம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து தற்கொலை செய்து கொண்ட செல்வத்தின் மனைவி கிராணவள்ளி புகாரின் பேரில் திருவாடானை காவல் துறை ஆய்வாளா் கலாராணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.