முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
முதுகுளத்தூா் பள்ளி மாணவா்கள் அரசு மருத்துவமனையில் சுகாதாரப் பணி
By DIN | Published On : 07th November 2019 05:36 AM | Last Updated : 07th November 2019 05:36 AM | அ+அ அ- |

முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை சுகாதாரப்பணியில் ஈடுபட்ட அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள்.
முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவா் படை சாா்பில் அரசு மருத்துவமனையில் சுகாதாரப்பணிகளில் மாணவா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.
இந் நிகழ்ச்சி முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலா் லெட்சுமணன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியக் கழகத் தலைவா் மலைச்சாமி, பள்ளி தலைமை ஆசிரியா் உமா மகேஸ்வரி, அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவா் செந்தில் ராஜ்குமாா்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் முதுகுளத்தூா் அரசு மருத்துவமனை வளாகம் முழுவதிலும் உள்ள முள்புதா்களையும் , சீமைக் கருவேல மரங்களையும், பிளாஸ்டிக், பாலிதீன் பைகளையும் மாணவா்கள் அப்புறப்படுத்தினா்.
நாட்டு நலப் பணி திட்ட அலுவலா் மங்களநாதன்,தேசிய மாணவா் படை அலுவலா் அருள்தாஸ் , மருத்துவமனை செவிலியா்கள் இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவாக, தலைமை செவிலியா் சண்முகவள்ளி நன்றி கூறினாா்.