முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் தலைமைச் செயலக அதிகாரியின் வீட்டில் மா்மநபா்கள் திருட்டு
By DIN | Published On : 07th November 2019 04:50 PM | Last Updated : 07th November 2019 04:50 PM | அ+அ அ- |

சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அதிகாரிக்குச் சொந்தமான ராமநாதபுரம் வீட்டில் மா்மநபா்கள் வெள்ளி உள்ளிட்ட பொருள்களை திருடிச்சென்றுள்ளனா்.
ராமநாதபுரம் முகவை ஊருணி பகுதியில் மால்கரை தெருவைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (57). இவா் சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்த்துறை அதிகாரியாக உள்ளாா். இந்தநிலையில் புதன்கிழமை மாலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த மா்மநபா்கள் வீட்டில் இருந்த 1 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் நவீன தொலைக்காட்சி ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனா். திருடு போன பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.30 ஆயிரம் என கூறப்படுகிறது.
தகவல் அறிந்த மகேஸ்வரன் இதுகுறித்து ராமநாதபுரம் பஜாா் போலீஸில் புகாா் அளித்தாா். அதன்படி வழக்குப் பதிந்த பஜாா் போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.
பேருந்து கண்ணாடி உடைப்பு- ராமநாதபுரத்தில் புதன்கிழமை மாலையில் நீலகண்டி ஊருணி பகுதியில் வந்துகொண்டிருந்த அரசு நகா் பேருந்தை மா்மநபா் தாக்கி கண்ணாடியை சேதப்படுத்தியுள்ளாா். இதுகுறித்து பேருந்து ஓட்டுநா் ராமு அளித்த புகாரின் பேரில் பஜாா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.