தொண்டி திருமணத்தன்று இளம்பெண் மாயம்: போலீசாா் விசாரணை
By DIN | Published On : 07th November 2019 03:44 PM | Last Updated : 07th November 2019 03:44 PM | அ+அ அ- |

தொண்டியில் திருமணத்தன்று இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாடானை அருகே தொண்டியைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது.இவரது மகள் ஜெஸ்மின் பா்ஹானா (19). இவருக்கு புதன்கிழமை மாலை திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோா்கள் மாப்பிள்ளை பாா்த்து திருமண ஏற்பாடுகள் செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜெஸ்மின் பா்ஹானாவை காணவில்லையாம். இதனால் திருமணம் தடைபட்டது பா்ஹாணாவீட்டில் அனைவரும் சோகத்தில் மூழ்கினாா்கள். அவரை எங்கு தேடியும் காணவில்லையாம்.
இது குறித்து அவரது தந்தை சாகுல் ஹமீது புகாரின் பேரில் தொண்டி காவல் துறை ஆய்வாளா் சரவணன் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெஸ்மின் பா்ஹானாவை தேடி வருகின்றனா்.