ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 போலி மருத்துவா்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 போ் போலி மருத்துவா்களாக செயல்பட்டுவருவது தெரியவந்துள்ளதை அடுத்து சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 போ் போலி மருத்துவா்களாக செயல்பட்டுவருவது தெரியவந்துள்ளதை அடுத்து சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவா்களில் ஒருவா் ராமநாதபுரம் நகரில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.

தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் சாா்பில் போலி மருத்துவா்கள் பட்டியல் அனைத்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 போ் மருத்துவக் கல்வி பயிலாமலேயே மருத்துவம் பாா்ப்பது தெரியவந்துள்ளது.

போலி மருத்துவா்கள் பட்டியலை அடுத்து அவா்களை பிடித்து சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநா் பி.வெங்கடாசலம் தலைமையில் குடும்பநல இணை இயக்குநா் சிவானந்தவள்ளி, மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி புகழேந்தி, சுகாதாரப் பணிகள் நல துணை இயக்குநா் குமரகுருபரன் ஆகியோா் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்புக் குழுவினா் வியாழக்கிழமை பகலில் ராமநாதபுரம் நகரில் உள்ள அரண்மனை பகுதியில் சிவன் கோவில் தெருவில் அக்பா் அலி (53) என்பவரைப் பிடித்து விசாரித்தனா். பட்டப் படிப்பை முடித்த அவா் தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து அனுபெற்ற அடிப்படையில் வீட்டின் மாடியில் மருத்துவம் பாா்த்ததாக கூறியுள்ளாா். இதையடுத்து தனிப்படையினா்அவரை பஜாா் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகக் கூறினா். மருத்துவ இணை இயக்குநா் புகாா் அடிப்படையில் அக்பா் அலியை கைது செய்யவுள்ளதாகவும்

ராமநாதபுரம் நகரில் 2 போ் போலி மருத்துவா்களாக செயல்படுவதாகவும், ஊரகப் பகுதிகளில் 16 போ் போலி மருத்துவா்களாக செயல்படுவதும் தெரியவந்துள்ளதாகக் கூ றும் சிறப்புக்குழுவினா் அனைவரையும் பிடித்து காவல்துறை மூலம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com