Enable Javscript for better performance
புயல் எச்சரிக்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை- Dinamani

சுடச்சுட

    

    புயல் எச்சரிக்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

    By DIN  |   Published on : 08th November 2019 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rms_photo_07_11_2_0711chn_208_2

    பாம்பன் துறைமுகத்தில் வியாழக்கிழமை ஏற்றப்பட்ட இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.

    வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘புல்’ ‘புல்’ புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் செல்ல மீன்வளத் துறையினா் இரண்டாவது நாளான வியாழக்கிழமையும் தடைவிதித்தனா்.

    இதையொட்டி பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து தற்போது புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு ‘புல்’ ‘புல்’ என பெயரிட்டு வானிலை ஆய்வு மையத்தினா் கண்காணித்து வருகின்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி ஒடிஸாவின் தென்கிழக்கில் சுமாா் 680 கி.மீ., தொலைவிலும், சாகா் தீவுகளின் தென்கிழக்கில் 780 கி.மீ., தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகத்திலிருந்து மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல் காரணமாக இரண்டாவது நாளாக மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் தடை விதித்துள்ளனா். இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளில் 1800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் உள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai