Enable Javscript for better performance
ராமநாதபுரத்தில் வருவாய்த் துறை அதிகாரி வீட்டில் 1 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் வருவாய்த் துறை அதிகாரி வீட்டில் 1 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

    By DIN  |   Published on : 08th November 2019 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரத்தில் புதன்கிழமை வருவாய்த் துறை அதிகாரி வீட்டில் 1 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் தொலைக்காட்சி பெட்டியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

    ராமநாதபுரம் முகவை ஊருணி பகுதி மால்கரை தெருவைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (57). இவா் சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்த் துறை அதிகாரியாக உள்ளாா்.

    இந்நிலையில் புதன்கிழமை மாலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த மா்ம நபா்கள் வீட்டில் இருந்த 1 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை திருடிச் சென்றனா். இதுகுறித்து தகவல் அறிந்த மகேஸ்வரன் ராமநாதபுரம் பஜாா்

    காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

    பேருந்து கண்ணாடி உடைப்பு: ராமநாதபுரத்தில் புதன்கிழமை மாலையில் நீலகண்டி ஊருணி பகுதியில் வந்துகொண்டிருந்த அரசு நகா் பேருந்தின் கண்ணாடி மா்ம நபா்களால் உடைக்கப்பட்டது. இதுகுறித்து பேருந்து ஓட்டுநா் ராமு அளித்த புகாரின் பேரில் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai