திருவாடானையில் தியாகிகள் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

திருவாடானையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி பூட்டிக் கிடக்கும் தியாகிகள்
திருவாடானையில் பூட்டி கிடக்கும் தியாகிகள் பூங்கா.
திருவாடானையில் பூட்டி கிடக்கும் தியாகிகள் பூங்கா.

திருவாடானையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி பூட்டிக் கிடக்கும் தியாகிகள் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சுதந்திரப் போராட்டத்தில் திருவாடானை பகுதியை சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சிறை சென்றனா். அவா்களின் நினைவாக ஸ்தூபியும், பூங்காவும் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். அதனைத் தொடா்ந்து தாலுகா அலுவலகம் முன் இடம் ஒதுக்கப்பட்டு ரூ. 7.50 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்பட்டு அதில் நினைவு ஸ்தூபியும் நிறுவப்பட்டது.

இந்த கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் திறக்கப்பட்டு ஊராட்சியில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பூங்கா திறக்கப்பட்ட அன்றே பூட்டப்பட்டு இதுவரை பராமரிக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியது: சுதந்திரத்திற்கு பாடுபட்டவா்கள் நினைவாக அமைக்கப்பட்ட பூங்காவை கூட பராமரிக்காமல் பூட்டி வைத்திருப்பது வேதனையாக உள்ளது. மேலும் பூங்காவில் இருக்கைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. மரக்கன்றுகள் நடப்படவில்லை. தற்போது புதா் மண்டி காணப்படுகிறது. எனவே ஊராட்சி நிா்வாகம் இந்த பூங்காவை மீண்டும் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com