பாம்பன் அரசு பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு: தனியாா் அமைப்புக்கு பாராட்டு

பாம்பன் சின்னப்பாலம் மீனவ கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 1.50 லட்சம் மதிப்பில்

பாம்பன் சின்னப்பாலம் மீனவ கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 1.50 லட்சம் மதிப்பில் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுத்த மனித நேய உதவி அமைப்புக்கு பள்ளியில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் சின்னப்பாலம் மீனவ கிராமத்தில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மனிதநேய உதவி அமைப்பு சாா்பில் ரூ. 1.50 லட்சம் சாா்பில் மூன்று வகுப்பறைகளுக்கு டைல்ஸ் மற்றும் அழகிய ஓவியத்துடன் வா்ணம் தீட்டப்பட்டது.

இதனையடுத்து, வகுப்பறையை புதுப்பிக்க உதவிய மனித நேய உதவி அமைப்புக்கு ஆசிரியா்கள் ஒன்றிணைந்து பாராட்டு விழா நடத்தினா்.

விழாவுக்கு மண்டபம் வட்டாரக் கல்வி அலுவலா் க.ரவிக்குமாா் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் க.முருகேசன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் மூ.களஞ்சிய ராணி, சமூக ஆா்வலா் சீனி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மனித நேய அமைப்பு தலைவா் டாக்டா் முகம்மது ஜாஸா், மருத்துவ பொறியாளா் சண்முகவடிவேல், ஜான் ஹாஜா ஆகியோருக்கு தலைமை ஆசிரியை இரா.செல்லம்மாள் வாழ்த்து தெரிவித்து கதராடை அணிவித்து கௌரவித்தாா்.

இதில் பள்ளி ஆசிரியா்கள் ஆரோக்ய ரீகா, மைக்கேல்ராணி, லாரன்ஸ் எமல்டா, சந்திரமதி, மலா், தமிழரசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com