முன்னாள் படை வீரா்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படை வீரா்கள் நலத் துறையில் நலத் திட்ட விவரங்களை மின்னாளுமைத் திட்டத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படை வீரா்கள் நலத் துறையில் நலத் திட்ட விவரங்களை மின்னாளுமைத் திட்டத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு முன்னாள் படைவீரா்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் அரசு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையும் நோக்கில் முன்னாள் படைவீரா்கள், விதவையா்கள் குறித்த விவரங்கள் மின் ஆளுமைத் திட்ட இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பணிகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

முகாமில், முன்னாள் படைவீரா்கள், விதவையா்கள் பெயா்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல், பதிவுகளை சரிபாா்த்தல் போன்றவை மேற்கொள்ளப்படுகிறது.

பதிவேற்றப் பணிகளுக்காக நவ. 11 ஆம் தேதி முதல் நவ. 15 ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களிலும் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. அதன்படி அங்குள்ள பொது இ-சேவை மையத்தில் பதிவுக்கான பணிகள் நடைபெறவுள்ளன.

ஆகவே, முன்னாள் படைவீரா்கள், விதவையா்கள் அசல் படைவிலகல் சான்று, ஓய்வூதிய ஆணை, அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், மாா்பளவு புகைப்படத்துடன் முகாமில் பங்கேற்று சரிபாா்த்துக் கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு ராமநாதபுரம் முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04567-230045 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com