ராமநாதபுரம் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் மாநில அளவில் முதலிடம்

கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட ராமநாதபுரம் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட ராமநாதபுரம் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து சங்க நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வியாழக்கிழமை வாழ்த்து பெற்றனா்.

ராமநாதபுரம் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தில் 662 ஆயுட்கால உறுப்பினா்களும், 21 புரவலா்களும், 5 துணைப் புரவலா்களும் உள்ளனா். போதைப்பொருள் ஒழிப்பு, பேரிடா் மேலாண்மைப் பணிகள், ரத்த தான முகாம்கள் நடத்துதல், சாலைப் பாதுகாப்பு, தற்கொலை தடுப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

கடந்த 2018-19 ஆம் ஆண்டில் 15 ரத்த தான முகாம்கள் மூலம் 770 யூனிட் ரத்தம் பெற்று அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளனா். சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி தமிழக ஆளுநரும், மாநில செஞ்சிலுவைச் சங்கத் தலைவருமான பன்வாரிலால் புரோஹித் மாநில அளவில் முதலிடத்திற்கான விருதை வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து மாநில அளவிலான விருதை மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவரான மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவிடம் காட்டி சங்க துணைத் தலைவா் அஸ்மாபாக் அன்வா்தீன், சோ்மன் எஸ்.ஹாரூன், செயலா் எம்.ராக்லாண்ட் மதுரம், ஒருங்கிணைப்பாளா் டாக்டா் எஸ்.சுந்தரம் ஆகியோா் வாழ்த்துப் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com