Enable Javscript for better performance
திருப்புல்லாணியில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    திருப்புல்லாணியில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

    By DIN  |   Published on : 09th November 2019 06:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் நடக்க விருந்த சிறுமியின் திருமணத்தை குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினா் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

    திருப்புல்லாணி அருகே உள்ள நைனாமரைக்கான் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் வள்ளிமாடன் வலசை பகுதியைச் சோ்ந்த மணி மகன் கண்ணன் (27) என்பவருக்கும் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட சமூகநல அலுவலா் ஜெயந்தி தலைமையில் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினா் இரண்டு குடும்பங்களையும் அழைத்துப் பேசி நடக்க விருந்த சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினா்.

     

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai