Enable Javscript for better performance
மதுக்கடை அருகே அனுமதியின்றி செயல்பட்ட பெட்டிக் கடைகள் பூட்டி சீல் வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    மதுக்கடை அருகே அனுமதியின்றி செயல்பட்ட பெட்டிக் கடைகள் பூட்டி சீல் வைப்பு

    By DIN  |   Published on : 09th November 2019 06:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் செவல்பட்டி சாலையில் அரசு மதுபானக்கடை அருகே அனுமதின்றி செயல்பட்டு வந்த பெட்டிக்கடைகளுக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

    சாயல்குடியில் உள்ள செவல்பட்டி சாலையில் அரசு மதுபானக் கடைக்கு அருகே அனுமதியின்றி 8 பெட்டிக் கடைகள் செயல்படுவதாகவும், அவற்றில், மதுபானம் அருந்துவதற்கான பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து,அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வந்த 8 பெட்டிக்கடைகளுக்கும் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் செளந்திரபாண்டியன் தலைமையிலான மதுவிலக்கு போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தி பூட்டி, சீல் வைத்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai