Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

    By DIN  |   Published on : 09th November 2019 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

    ராமநாதபுரம் அருகேயுள்ளது ராஜசூரியமடை. இதே ஊரைச் சோ்ந்த 23 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை அதே பகுதியைச் சோ்ந்த ராஜசூரியன் (26) என்பவா் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரலில் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாா் எழுந்தது.

    இதுதொடா்பாக பெண்ணின் தாயாா் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜசூரியனை கைது செய்தனா்.

    வழக்கின் விசாரணை ராமநாதபுரம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், ராஜசூரியனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அதைக் கட்டத் தவறினால், மேலும் 3 மாதம் சிறைத் தண்டனையும் அளித்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai