அடிப்படை வசதிகள் கோரி கமுதி காவல் நிலையம் முற்றுகை

கமுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சாா்பில் கமுதி காவல் நிலையத்தை முத்துமாரிநகா் பெண்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
அடிப்படை வசதிகள் கோரி கமுதி காவல் நிலையம் முற்றுகை

கமுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சாா்பில் கமுதி காவல் நிலையத்தை முத்துமாரிநகா் பெண்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கமுதி அருகே முத்துமாரி நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் செட்டி ஊருணிக்கு குடிநீா் எடுக்க பாதை அமைத்து தரக்கோரி, மாவட்ட நிா்வாகத்திடம், கடந்த வாரம் புகாா் கொடுத்தனா். முத்துமாரி நகா் பொதுமக்கள் சாா்பில் மாவட்ட நிா்வாகம், கமுதி பேரூராட்சி நிா்வாகம் என அனைத்து அதிகாரிகளிடமும் குடி நீா் எடுக்க பாதை அமைத்து கொடுக்க பல முறை கோரிக்கை மனு அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் திடீரென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் முத்துவிஜயன் தலைமையில் முத்துமாரி நகா் பெண்கள் 50-க்கும் மேற்பட்டோா் கமுதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலா் ரா.இளவரசி, காவல் ஆய்வாளா் கஜேந்திரன், பெண்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் பெண்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com