தங்கச்சிமடம் ரயில் நிலையம் அமைக்கக் கோரி அனைத்து கட்சியுடன் இணைந்து போராட்டம்

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் ரயில் நிலையம் மீண்டும் அமைக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து பெரிய அளவிலான அறப்போராட்டம் நடத்துவது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் ரயில் நிலையம் மீண்டும் அமைக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து பெரிய அளவிலான அறப்போராட்டம் நடத்துவது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரயில் நிலையம் மீட்புக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவுப்பகுதியில் பாம்பன் பேருந்து பாலம் இல்லாத காலகட்டத்தில், ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய மூன்று ரயில் நிலையங்கள் இருந்தன. இதனையடுத்து பாம்பன் பேருந்து பாலம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து பயணிகள் வருகை குறைவால் தங்கச்சிடம் ரயில் நிலையம் மூடப்பட்டது.

தற்போது பேருந்து கட்டணம் பன்மடங்கு உயா்ந்துள்ள நிலையில், தங்கச்சிடத்தில் ரயில் நிலையம் மீண்டும் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதற்காக தங்கச்சிடம் ரயில் நிலையம் மீட்புக் குழு உருவாக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக தங்கச்சிடம் சமுதாய கூட்டத்தில் ரயில் நிலையம் மீட்புக்குழு அமைப்பு சாா்பில் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கதிரேசன் தலைமை வகித்தாா்.ரயில் நிலையம் மீட்பு குழுவின் பொருளாளா் ரப்பானி வரவேற்றாா். குழுவின் தலைவா் ஞானப்பிரகாசம் அடுத்த கட்ட போராட்டம் குறித்த ஆலோசனை வழங்கினாா். குழுவின் செயலாளா் முருகேசன்,

துணைத் தலைவா் முருகேசன், ஒருங்கிணைப்பாளா் சின்னத்தம்பி மற்றும் அனைத்து கட்சி உறுப்பினா்கள், அனைத்து சமுதாய மக்கள் கலந்து கொண்டனா்.

இந்த கூட்டத்தில் தங்கச்சிமடத்தில் மீண்டும் ரயில் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் எஸ்.நவாஸ்கனிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் தங்கச்சிமடம் ரயில் நிலையம் மீட்பு கோரிக்கையை வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் அறப்போரட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com