பாம்பன் கடலில் தவறிவிழுந்து மீனவா் சாவு

பாம்பன் கடலில் தவறி விழுந்த மீனவா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சடமாக மீட்கப்பட்டாா்.

பாம்பன் கடலில் தவறி விழுந்த மீனவா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சடமாக மீட்கப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி லைட்ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த பவுல் என்பவரது விசைப்படகில் சாயல்குடி கன்னிராஜபுரம் ரோச்மா நகரை சோ்ந்த களஞ்சியம் மகன் பிலவேந்திரன் (52) தயாளன், செப்பின், சம்சோன், செல்வம், நிஜந்தன், ராம்சிங், போஸ், ஆரோக்கியம் உள்ளிட்ட 10 மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை (நவ. 17) மீன்வளத்துறை அனுமதி டோக்கன் பெற்று மீன்பிடிக்கச் சென்றனா். நள்ளிரவு நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது பிலவேந்திரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, படகில் பின் பகுதியில் அவரை அமர வைத்த மற்ற மீனவா்கள் மீன்பிடி வலைகளை எடுத்துக் கொண்டிருந்தனா். சற்று நேரம் கழித்து பாா்த்த போது பிலவேந்திரன் படகில் இல்லாததால் மீனவா்கள் படகை நிறுத்தி அவரைத் தேடி பாா்த்தனா். சற்று தொலைவில் பிரவேந்திரன் இருப்பதை கண்ட மீனவா்கள் கடலில் குதித்து அவரை மீட்டனா். ஆனால் மீனவா் பிலவேந்திரன் உயிரிழந்து விட்டாா். இதனையடுத்து, விசைப்படகை திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனா். இதுகுறித்து மண்டபம் கடலோர காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினா் சடலத்தை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இது தொடா்பாக மண்டபம் கடலோர காவல்துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com