உப்பூா் அருகே சட்டவிரோதமது விற்பனை: ஒருவா் கைது
By DIN | Published on : 25th November 2019 07:14 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாடனை: திருவாடானை அருகே உப்பூா் அனல்மின் நிலையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பதாக திருப்பாலைக்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருப்பாலைக்குடி காவல் துறை ஆய்வாளா் முத்து மீனாட்சி சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டாா். அங்கு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த நாகனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த நாகநாதன் ( 46 )என்பவரை பிடித்து விசாரித்தபோது அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.