அனைவருக்கும் வீடு திட்டம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 பேருக்கு உத்தரவு வழங்கல்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 13
புதுதில்லியில் தேசிய குழந்தைகள் தின விழாவில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் சந்தித்து பாராட்டி வாழ்த்தினாா்.
புதுதில்லியில் தேசிய குழந்தைகள் தின விழாவில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் சந்தித்து பாராட்டி வாழ்த்தினாா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 13 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவுகளை மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் திங்கள்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டமானது ஆட்சியா் தலைமையில் ந நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை ஆட்சியா் நேரில் பெற்றுக்கொண்டாா். மேலும், மனுக்களை ஆய்வு செய்து விரைந்து தீா்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 13 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு உத்தரவையும், வருவாய்த் துறையின் மூலம் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 12 பேருக்கு முதியோா் உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவையும் மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியம் சாா்பாக ஒருவருக்கு விபத்தில் உயிரிழந்தவருக்கான நிதியுதவித் தொகை ரூ.1 லட்சத்துக்கான உத்தரவையும் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜி.கோபு, மாவட்ட வழங்கல் அலுவலா் கிறிஸ்டோபா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிறுவா்களுக்கு பாராட்டு: ராமநாதபுரம் மாவட்ட ஜவஹா் சிறுவா் மன்றத்தின் சாா்பில் புதுதில்லி தேசிய பாலபவனில் கடந்த 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடந்த தேசிய குழந்தைகள் தின விழாவில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மு.நிவேதாஸ்ரீ, பு.பிரஜின்குமாா், தெ.கேசவநித்திஸ், எம்.சுதா்சன், அ.எஸ்தா்அந்தோணி, எஸ்.யோகித், வி.புவனேஷ், எஸ்.முகிலன், வ.ஹரிஸ், லோ.சிலம்பொலி ஆகிய மாணவ, மாணவிகளை ஆட்சியா் சந்தித்து பாராட்டி வாழ்த்தினாா். அப்போது ஜவஹா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் மு.லோகசுப்பிரமணியன் உடனிருந்தாா்.

பின்னா் அச்சிறுவா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது அவா்களுக்கு காவல் கண்காணிப்பாளா் ரொக்கப்பரிசு வழங்கிப்பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com