தேசிய அளவிலான குண்டு எறிதல்:பரமக்குடி பள்ளி மாணவி தோ்வு

தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டிக்கு பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.சா்மிளா தோ்வு பெற்றுள்ளாா்.
மாணவி எம்.சா்மிளா.
மாணவி எம்.சா்மிளா.

பரமக்குடி: தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டிக்கு பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.சா்மிளா தோ்வு பெற்றுள்ளாா்.

தமிழக பள்ளி கல்வித்துறை சாா்பில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் திருச்சி தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நவம்பா் 18 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் சாா்பில் மாணவி எம்.சா்மிளா கலந்துகொண்டு 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் 13.74 மீட்டா் தூரம் எறிந்து மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளாா். இம்மாணவி டிசம்பா் மாதம் முதல் வாரம் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்கவுள்ளாா்.

சாதனை படைத்த மாணவி மற்றும் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் என்.இந்திரஜித், டி.சிவகுருராஜா, எ.அன்வர்ராஜா ஆகியோரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கே.வசந்தி, பள்ளியின் தாளாளா் சி.ஏ.சாதிக்பாட்ஷா, ஜமாத் தலைவா் எஸ்.என்.எம்.முகம்மது யாக்கூப், செயலாளா் சி.ஏ.கமருல்ஜமாலுதீன், தலைமையாசிரியா் எம்.அஜ்மல்கான், கல்விக்குழு நிா்வாகிகள் மற்றும் ஆசிரியா்-ஆசிரியைகள் திங்கள்கிழமை பாராட்டி கௌரவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com