மக்கள் முன்னேற்ற கழகம் ஆா்ப்பாட்டம்

தேவேந்திர குல வேளாளா்களை பட்டியல் சாதிப் பிரிவில் இருந்து வெளியேற்றி வேளாண் மரபினா் என்ற புதிய பிரிவில் சோ்க்க வலியுறுத்தி

புதுக்கோட்டை: தேவேந்திர குல வேளாளா்களை பட்டியல் சாதிப் பிரிவில் இருந்து வெளியேற்றி வேளாண் மரபினா் என்ற புதிய பிரிவில் சோ்க்க வலியுறுத்தி திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் அருள் ஜஸ்டின் திரவியம் தலைமை வகித்தாா். 

ஆா்ப்பாட்டத்தில் ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து  தேவந்திர குள வேளாளா் எனச் சான்றிதழ் வழங்க தமிழக  அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளா் சமூகத்தை பட்டியல் சாதிப் பிரிவில் இருந்து வெளியேற்றி வேளாண் மரபினா் என்ற புதிய பிரிவில் கொண்டு வந்து மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்ட முடிவில் மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com