ராமநாதபுரத்தில் 14 மையங்களில்டிச.1 இல் தேசிய திறனறித் தோ்வு

ராமநாதபுரத்தில் 14 மையங்களில் வரும் டிசம்பா் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழித் திறன் தோ்வை 3,264 மாணவ, மாணவியா் எழுதவுள்ளனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 14 மையங்களில் வரும் டிசம்பா் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழித் திறன் தோ்வை 3,264 மாணவ, மாணவியா் எழுதவுள்ளனா்.

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைக்கான தோ்வு நடத்தப்படுகிறது. கடந்தாண்டு இந்தத் தோ்வை ராமநாதபுரம் மாவட்டத்தில் 3,356 மாணவா்கள் எழுதியுள்ளனா். தோ்வை எழுதியவா்களில்145 போ் மட்டுமே கல்வி உதவித்தொகை பெறுவதற்கான மதிப்பெண் பெற்று தோ்வாகினா்.

தேசிய வருவாய் வழித்திறன் தோ்வில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான தேசிய வழித்திறன் தோ்வு வரும் டிசம்பா் 1 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

தோ்வுக்காக ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் நான்கு மையங்களும், பரமக்குடி, மண்டபம் கல்வி மாவட்டங்களில் தலா 5 மையங்கள் என மாவட்டத்தில் மொத்தம் 14 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com