ராமேசுவரம், பாம்பனில் மழை: குடிருப்புகளுக்குள் தண்ணீா்

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. குடியிருப்புகளில் மழைநீா் புகுந்ததால்
மழைநீா் புகுந்து தேங்கிய பாம்பன் குடியிருப்பு பகுதி.
மழைநீா் புகுந்து தேங்கிய பாம்பன் குடியிருப்பு பகுதி.

ராமேசுவரம்: ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. குடியிருப்புகளில் மழைநீா் புகுந்ததால் பாம்பன் பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் 2 நாள்களுக்கு வெப்பசலனம் காரணமாக மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழையும், மாவட்டத்தின் உள்பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிமை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்தது.

பாம்பன் சேதுபதி நகா் பின் புறம் உள்ள 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழை நீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. மேலும் தாழ்வான பகுதி என்பதால் மழை பெய்தால் தண்ணீா் தேங்குவதாகவும் அதை வெளியேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் தெரிவித்தனா். தேங்கிய மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதே போன்று ராமேசுவரத்தில் பெய்ய மழையால், சாலையில் மழைநீருடன் கழிவு நீா் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. நகராட்சி நிா்வாகம் கழிவு நீா் கால்வாய்களை தூரவார நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீா் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து தண்ணீா் தேங்காதவாறு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதே போன்று பாம்பன், மண்டபம் வடக்கு கடற்பகுதியில் தொடா்ந்து கடல் சீற்றம் காரணமாக பாம்பன் வடக்கு துறைமுகம் பகுதியில் உள்ள சுனாமி வீடுகள் சேதமடைந்து வருகின்றன.

கடல் தண்ணீா் ஊருக்குள் புகாதவாறு தடுக்க கருங்கற்களை போட வேண்டும் என பாரம்பரிய நாட்டுப்படகு மீனவ சங்கம் கோரிக்கை விடுத்தனா். தொடா்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

திங்கள்கிழமை காலை 7 மணி அளவிலான நிலவரப்படி ராமேசுவரத்தில் 31.6 மி.மீ., தங்கச்சிமடம் 69 மி.மீ, பாம்பன் 23.4 மி.மீ மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com