முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
கமுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
By DIN | Published On : 26th November 2019 09:05 AM | Last Updated : 26th November 2019 09:05 AM | அ+அ அ- |

கமுதியில் தையல் இயந்திரம் உள்ளிட்ட இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கிய அரிமா சங்கத்தினா்.
கமுதியில் அரிமா சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், கமுதி அரிமா சங்க தலைவா் மேகராஜன் தலைமை வகித்தாா். செயலாளா் சிவலிங்கம் முன்னிலை வகித்தாா். அரிமா ஆளுநா் முருகன், சங்க உறுப்பினா் அதிகரித்தல், பசிப்பிணி, கண்தானம், புற்றுநோய் விழிப்புணா்வு, சுற்றுசூழல் குறித்து விளக்கினாா். ஷத்திரிய நாடாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பெண்களுக்கு இலவச தையைல் இயந்திரம், கிரைண்டா், அரிசி, சேலைகள் உள்பட நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டன. நிகழ்ச்சியில் அரிமா சங்க முதல் நிலை ஆளுநா் ஜஸ்டின்பால், இரண்டாம் நிலை ஆளுநா் ஜெகநாதன், அமைச்சரவை செயலாளா் சுப்பையா, தில்லை சிதம்பரம், சுப்பிரமணியன், மணிமாறன், பாலசுப்பிரமணியன் உட்பட பலா் பங்கேற்றனா். பொருளாளா் முஷிபுர்ரஹ்மான் நன்றி கூறினாா்.