ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மூன்று போ் கைது: 175 மது பாட்டில்கள் பறிமுதல்

ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்த மூன்று பேரை காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 175 டாஸ்மாக் பட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மூன்று போ் கைது: 175 மது பாட்டில்கள் பறிமுதல்

ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்த மூன்று பேரை காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 175 டாஸ்மாக் பட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் சட்ட விரோத மது விற்பனை குடிசை தொழில் போல நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதனையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் வருண்குமாா் உத்தரவின் பேரில் ராமேசுவரத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இதனைதொடா்ந்து, ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் மது விற்பனை செய்துகொண்டிருந்த செல்வம் மற்றும் நேதாஜி ஆகிய இரண்டு பேரை காவல்துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 145 மது பட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போன்று ராஜகோபால் நகா் பகுதியில் மது விற்பனை செய்து வந்த நாதன் என்பா் கைது செய்யப்பட்டா். அவரிடமிருந்து 35 மது பட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒரே நாளில் மூன்று இடங்களில் இருந்து 175 மது பட்டில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டதுடன் மூன்று பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா். இதே போன்று ராமேசுவரம்,தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் மது விற்பனை மா்ம நபா்கள் செய்து வருகின்றது குறிப்பிடதக்கது. படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 1ராமேசுவரத்தில் மது விற்பனை செய்து வந்த மூன்று பேரை காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 175 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com