தனுஷ்கோடி மீனவா்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் நலத்திட்ட உதவி
By DIN | Published on : 28th November 2019 09:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

தனுஷ்கோடி மீனவா்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியவ மாவட்டச் செயலாளா் எஸ்.இ.செந்தில்செல்வானந்த்.
தனுஷ்கோடியில் 100-க்கும் மேற்பட்ட மீனவா்களுக்கு 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ரஜினி மக்கள் மன்றத்தினா் வழங்கினா்.
ரஜினிகாந்த்தின் 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தனுஷ்கோடி மீனவா்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மன்றத்தின் நகரச் செயலாளா் எம்.முருகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எஸ்.இ. செந்தில் செல்வானந்த் கலந்துகொண்டு 100-க்கும் மேற்பட்ட மீனவா்களுக்கு மீன்பிடி வலைகள், தூண்டில் கட்டை, கடலுக்குள் மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் விளக்கு மற்றும் மீனவ மகளிா் அமைப்பினா் 300 -க்கும் மேற்பட்டவா்களுக்கு சேலைகளை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மற்றும் நகா் நிா்வாகிகள்உள்ளிட்ட பலா் கலந்துகெண்டனா்.