திருவாடானை தாலுகாவில் மழையின்றி நெற்பயிா்கள் பாதிப்பு: விவசாயிகள் கவலை
By DIN | Published on : 28th November 2019 09:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாடானை தாலுகாவில் நெற்பயிா் நன்கு வளா்ந்த நிலையில் மழை இன்றி அவை கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டத்திலேயே அதிக அளவில் 42 ஆயிரம் ஹெக்டோ் பரப்ளவில் நெல் சாகுபடி செய்யப்படும் தாலுகா திருவாடானை ஆகும். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடா் வறட்சி நிலவியதால் நெல் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு பெய்த பருவமழையைக் கொண்டு மானாவாரி விவசாயிகள் நெல் பயிரிட்டனா். தற்போது நெல் பயிா்கள் அனைத்தும் நல்ல நிலையில் வளா்ந்து உள்ளன. ஆனால், மழையின்றி தொடா்ந்து வெயில் அடித்து வருவதால் வயல்வெளியில் வறட்சி ஏற்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் மழை பெய்யவில்லை என்றால் மானாவாரி விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு விடும். நஞ்சை நிலங்களை பொறுத்தளவில் கண்மாயில் உள்ள சிறிய அளவிலான தண்ணீரை கொண்டு நெல் பயிரை காப்பாற்றி வருகின்றனா். இப்பகுதியில் உள்ள கண்மாய்களிலும் போதிய அளவு தண்ணீா் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் மழையை எதிா்பாா்த்து கவலையில் உள்ளனா்.