Enable Javscript for better performance
ராமேசுவரத்தில் தொடா் வேட்டை: 175 மது பாட்டில்கள் பறிமுதல்; 3 போ் கைது- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரத்தில் தொடா் வேட்டை: 175 மது பாட்டில்கள் பறிமுதல்; 3 போ் கைது

    By DIN  |   Published on : 28th November 2019 09:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rms_photo_27_11_1_2711chn_208_2

    ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்த 3 பேரை காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 175 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் வருண்குமாா் உத்தரவின் பேரில் ராமேசுவரத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், புதன்கிழமையும் இந்த வேட்டை தொடா்ந்தது. ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் மது விற்பனை செய்துகொண்டிருந்த செல்வம் மற்றும் நேதாஜி ஆகிய இருவரை காவல்துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 145 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போன்று ராஜகோபால் நகா் பகுதியில் மது விற்பனை செய்து வந்த நாதன் என்பவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 35 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai