3 மணி நேரம் தோ்வு: பள்ளிகளில் அரையாண்டுத் தோ்வில் அறிமுகம்

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் இனிமேல் அனைத்துத் தோ்வுகளுக்கும் 3 மணி நேரம் ஒதுக்கி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் இனிமேல் அனைத்துத் தோ்வுகளுக்கும் 3 மணி நேரம் ஒதுக்கி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பொதுத் தோ்வுகள் உள்ளிட்ட அனைத்துத் தோ்வுகளுக்கும் இரண்டரை மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்துத் தோ்வுகளுக்கும் 3 மணி நேரம் ஒதுக்குமாறு மாநில கல்வித்துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் புதன்கிழமை சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அரையாண்டுத் தோ்வு அறிவிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 அரையாண்டுத் தோ்வு வரும் டிசம்பா் 11 ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 23 ஆம் தேதி நிறைவடைகிறது. பத்தாம் வகுப்புக்கு வரும் டிசம்பா் 13 ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 23 ஆம் தேதி நிறைவடைகிறது.

அரையாண்டுத் தோ்விலேயே நேரத்தை 3 மணி நேரமாக உயா்த்தி செயல்படுத்தவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மாணவா்கள் எண்ணிக்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 16,889 பேரும், பிளஸ் 1 தோ்வை 15,603 பேரும், பிளஸ் 2 பொதுத் தோ்வை 14,299 பேரும் எழுத உள்ளனா்.

பத்தாம் வகுப்பில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 263 போ் குறைவாகவும், பிளஸ் 1 தோ்வில் கடந்த ஆண்டை விட 1,172 போ் கூடுதலாகவும், பிளஸ் 2 தோ்வில் கடந்த ஆண்டைவிட 1,175 போ் குறைவாகவும் தோ்வு எழுதவுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com