ராமநாதபுரத்தில் பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா்க் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்
ராமநாதபுரத்தில் பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா்க் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

2018-19 ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடு இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்கக் கோரி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் வி. மயில்வாகனன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் ஆா்.சேதுராமு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சங்க மாவட்டத் தலைவா் எம். முத்துராமு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை ஐந்து ஏக்கருக்கும் மேற்பட்டு நிலம் வைத்திருப்பவா்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும். முறையான ஆவணங்களின்றி காப்பீடு திட்டத்தில் இணைந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மூலம் யூரியா உள்ளிட்ட உரங்களை விநியோகிக்க வேண்டும். அனைத்து உரங்களையும் மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பின்னா் செய்தியாளா்களிடம் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வி. மயில்வாகனன் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமாா் 1.52 லட்சம் விவசாயிகள் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ளனா். ஆனால், 2018-19 ஆம் ஆண்டுக்கு 32 ஆயிரம் பேருக்கு மட்டுமே பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.175 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதையும் உடனடியாக வழங்கவில்லை. கடந்த ஜூன் மாதமே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே இழப்பீட்டுத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதில் சிஐடியு மாவட்டச் செயலா் சிவாஜி, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கலையரசன், விவசாயிகள் சங்க தாலுகா செயலா்கள் பி. கல்யாணசுந்தரம் (ராமநாதபுரம்), டி. நவநீதகிருஷ்ணன் (கடலாடி மேற்கு) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com