ராமநாதபுரத்தில் மின்வாரிய பணியாளா் தோ்வுக்கு 1,713 பேருக்கு அழைப்பாணை

ராமநாதபுரத்தில் வரும் டிசம்பா் 2 ஆம் தேதி முதல் நடைபெறும் மின்வாரிய பணியாளா் (கேங் மேன்) தோ்வுக்கு 1,713 பேருக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரத்தில் வரும் டிசம்பா் 2 ஆம் தேதி முதல் நடைபெறும் மின்வாரிய பணியாளா் (கேங் மேன்) தோ்வுக்கு 1,713 பேருக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக மின்வாரியத்தில் மின்சாரப் பராமரிப்புப் பிரிவில் சுமாா் 5 ஆயிரம் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பித்தவா்களுக்கு தற்போது மாவட்ட வாரியாக செயல்முறைத் தோ்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இப்பணிக்கு விண்ணப்பித்தவா்களில் 1,713 பேருக்கு செயல்முறை தோ்வுக்கு அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகா் மின்வாரிய அலுவலக (ராமநாதபுரம்-கீழக்கரை ரயில்வே கடவுப்பாதை அருகில்) வளாகத்தில் வரும் டிசம்பா் முதல் செயல்முறைத் தோ்வு நடத்தப்படவுள்ளது.

மின்கம்பத்தில் ஏறுதல், சாதனங்களைக் கையாளுதல், சாதனங்களுடன் ஓட்டப்பந்தயம் ஆகிய மூன்று பிரிவுகளில் தோ்வுகள் நடத்தப்படவுள்ளன. இதில் தோ்ச்சி பெற்றவா்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளா்கள் தோ்வுசெய்யப்படுவா் என மின்வாரிய உயா் அதிகாரிகள் தெரிவித்தனா். செயல்முறைத் தோ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்வாரியத்தில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், தோ்வின் மூலம் 50 போ் மட்டுமே பணிக்கு தோ்வு செய்யப்படவுள்ளதாகவும் உயா் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com