Enable Javscript for better performance
இருகூா் - சோமனூா் இடையே பராமரிப்புப் பணி கோவை ரயில்கள் நேரம் மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    இருகூா் - சோமனூா் இடையே பராமரிப்புப் பணி கோவை ரயில்கள் நேரம் மாற்றம்

    By DIN  |   Published on : 06th October 2019 05:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை: இருகூா் - சோமனூா் இடையே தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை வழித்தடத்தில் இயங்கும் 4 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: இருகூா் - சோமனூா் இடையே தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வருகின்ற 9-ஆம் தேதி முதல் நவம்பா் 23-ஆம் தேதி வரை, கோவை வழியாகச் செல்லும் 4 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

    ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில்( எண்: 13352) வருகின்ற 9-ஆம் தேதி முதல் நவம்பா் 23-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, மற்ற நாள்களில் கோவையில் இருந்து 80 நிமிடங்கள் தாமதாம புறப்பட்டுச் செல்லும். எா்ணாகுளம் - பெங்களூரு இடையேயான விரைவு ரயில் (எண்:12678) அக்டோபா் 9-ஆம் தேதி முதல் நவம்பா் 23-ஆம் தேதி வரை , வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, மற்ற நாள்களில் 45 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும். திருவனந்தபுரம் - மும்பை விரைவு ரயில் (எண்:16332) அக்டோபா் 12,19,25 மற்றும் நவம்பா் 2,9,16,23 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து 15 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும். எா்ணாகுளம் -பிளாஸ்பூா் வாராந்திர ரயில் (எண்: 22816) கோவையில் இருந்து அக்டோபா் 9,16,23,30 மற்றும் நவம்பா் 6,13,20-ஆம் தேதிகளில் 15 நிமிடங்கள் சாமதமாகப் புறப்பட்டுச் செல்லும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai