Enable Javscript for better performance
சாலையோர மீன் விற்பனைக்கு நவீன நிழல் கூரை சாதனம்- Dinamani

சுடச்சுட

    
    7


    ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையோரத்தில் மீன் விற்பனை செய்வோருக்கு பயன்படும் வகையில் நவீன நிழல் கூரை சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு தென்னிந்திய மீனவர்கள் கூட்டமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் சார்பில் மீனவர்களுக்கான படகுகள், உயிர்காக்கும் சாதனங்கள் ஆகியவை மிகக்குறைந்த விலையில் உற்பத்தி செய்து விற்கப்படுகின்றன. தற்போது சாலையோரம் மீன் விற்பவர்களுக்காக பைபர் நிழற்குடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்தடி உயரமும், நான்கடி அகலமும் உடைய இந்த நிழற்குடையில் மேற்பகுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தி அமைப்பு உள்ளது. அதனுடன் இணைக்கப்பட்ட மின்சேமிப்புக்கலன் மூலம் 4 மணிநேரம் எரியும் மின்விளக்கும் உள்ளது. இதனால், இரவிலும் இதில் அமர்ந்து மீன்விற்பனை செய்ய இயலும். 
    நவீன நிழற்குடையின் மொத்த எடை 14 கிலோ என கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதை எளிதாக மடக்கி எடுத்துச் செல்லும் வசதியும் உள்ளது. நவீன நிழற்குடையை மீனவர்களிடம் அறிமுகப்படுத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்ட மீன்வளர்ச்சித் துறை துணை இயக்குநர் இ.காத்தவராயன் நிழற்குடையை செயல்படுத்தி சோதித்துப் பார்த்தார்.
    மேலும், கூட்டமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட மீனவர்கள் படகில் எடுத்துச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட உயிர்காக்கும் சாதனமும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விலை ரூ.25 ஆயிரம் என கூட்டமைப்பினர் கூறினர். இதன்மூலம் ஒரே நேரத்தில் கடலில் 8 மீனவர்கள் தப்பிக்கும்  வசதி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 
    நிழற்கூரை, உயிர்காக்கும் சிறிய படகு போன்ற சாதனம் ஆகியவற்றை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு அறிமுகப்படுத்தப்ú பாவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சமீப காலமாக படகு கவிழ்ந்து மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், உயிர்காக்கும் நவீன சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai