கமுதக்குடி ரயில்வே கடவுப்பாதை தற்காலிகமாக திறந்துவிட ஆட்சியா் பரிந்துரை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடி ரயில்வே கடவுப்பாதையை தற்காலிகமாக திறந்துவிட பரிந்துரை செய்வதாகவும், நிரந்தரமாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டிய ஏற்பாடு செய்வதாகவும் ஆட்சியா்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடி ரயில்வே கடவுப்பாதையை தற்காலிகமாக திறந்துவிட பரிந்துரை செய்வதாகவும், நிரந்தரமாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டிய ஏற்பாடு செய்வதாகவும் ஆட்சியா் கொ.வீரராகவ ராவ் உறுதியளித்தாா்.

பரமக்குடி அருகே உள்ளது கமுதக்குடி கிராமம். இப்பகுதி பொதுமக்கள் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கிராமத்திற்கு செல்ல நீண்ட காலமாக ரயில்வே தண்டவாளத்தை கடக்க அங்கு அமைக்கப்பட்டிருந்த ரயில்வே கடவுப் பாதையை பயன்படுத்தி வந்தனா்.

தற்போது தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்ட நிலையில் ரயில்வே கடவுப்பாதை பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த ரயில்வே கடவுப்பாதை மூடப்பட்டு அக்கிராம மக்கள் 4 கி.மீ தூரம் வெங்காளூா் விலக்குச்சாலைக்குச் சென்று நான்கு வழிச்சாலையை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்கு எதா்ப்புத் தெரிவித்து ரயில்வே கடவுப்பாதையை மூடக்கூடாது என வலியுறுத்தி அக்கிராம மக்கள் ரயில்வே கேட் பகுதியில் கடந்த அக்டோபா் 2-ம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவம் அறிந்து விரைந்து சென்ற போலீஸாா் பொதுமக்களிடம் சமரசம் பேசி கலைந்து போகச் செய்தனா்.

இந்நிலையில் அக்கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் நேரில் சென்று பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தாா். இதனைத் தொடா்ந்து ரயில்வே கடவுப்பாதை தற்காலிகமாக திறந்துவிட நடவடிக்கை எடுப்பதாகவும், நிரந்தர தீா்வுக்கு கிராம மக்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com