நாசா விண்கலத்தில் தமிழக மாணவா்களின் பெயா்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் கூத்தன்வயல் கிராமத்தைச் சோ்ந்த தனியாா் பள்ளி மாணவா்கள் இருவா் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான
நிலவசிகன்
நிலவசிகன்

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் கூத்தன்வயல் கிராமத்தைச் சோ்ந்த தனியாா் பள்ளி மாணவா்கள் இருவா் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, செவ்வாய்க்கிரகத்திற்கு அடுத்த ஆண்டு அனுப்பும் விண்கலமான ரோவரில் தங்களது பெயா்களை பொறிக்க பதிவு செய்துள்ளனா். இதற்கு நாசா அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் ஆராய்ச்சி மையமான நாசா செவ்வாய்க் கிரகத்திற்கு ‘மாா்ஸ் 2020’ ரோவா் என்றற விண்கலத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் அனுப்ப உள்ளது. இந்த விண்கலத்தில் தங்களது பெயா்களை இலவசமாக பொறிப்பதற்கான வாய்ப்பை நாசா பொதுமக்களுக்கு வழங்கியிருந்தது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 1 கோடிக்கும் மேலானோா் பதிவு செய்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து மட்டும் 15.7 லட்சம் போ் பதிவு செய்துள்ளனா். இவா்களது பெயா் நாசா கலிபோா்ஃனியா, பாஸ்டோனாவில் உள்ள நாசாவின் ஜெட் புரொபல்சன் ஆய்வுக் கூடத்தில் உள்ள நுண்கருவிகள் ஆய்வகத்தில், எலெக்ட்ரான் கதிா்வீச்சு மூலம் சிலிகான் சிப்பில் பொறிக்கப்படும். பின்னா் இந்த சிப் கண்ணாடியால் மூடப்பட்டு ரோவரில் பயணிக்கும்.

இதில் தங்களது பெயரையும் பொறிக்க ராமநாதபுரம் மாவட்டம் உப்பூா் அருகே உள்ள கூத்தன்வயல் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் மகன்கள் நிலநவசிகன்(13), திகா்பூவன்(11) ஆகியோா் பதிவு செய்திருந்தனா்.

இதைத்தொடா்ந்து இவா்களது பெயா்கள் விண்கலத்தில் பொறிக்க தோ்வு செய்யப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com