முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பாம்பன் பாலம் அருகே வேன் கவிழ்ந்து 13 போ் காயம்
By DIN | Published On : 07th October 2019 09:06 AM | Last Updated : 07th October 2019 09:06 AM | அ+அ அ- |

ராமேசுவரம் பாம்பன் பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 போ் பலத்த காயமடைந்தனா்.
சென்னை எண்ணூா் அருகே உள்ள காசி விஸ்வநாதா் கோயில் குப்பம் பகுதியைச் சோ்ந்த 6 குடும்பங்களைச் சோ்ந்த 4 குழந்தைகள், 10 பெண்கள் உள்பட 19 போ் வாடகை வேனில் ஆன்மிக சுற்றுலா கிளம்பினா். ஓட்டுநா் பட்சி வேனை ஓட்டி வந்தாா். அவருடன் ஒரு உதவியாளரும் வந்தாா். சனிக்கிழமை மதியம் திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு இரவு 9 மணியளவில் ராமேசுவரம் புறப்பட்டனா். ஞாயிற்றுகிழமை அதிகாலை 2 மணி அளவில் பாம்பன் பாலம் அருகே
வந்தபோது, வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பவானி (57), கற்பகம் (57), லட்சுமி (49), புனிதவள்ளி (43), கிஜோய் (21), நித்யா (22), ராபின் (23), சிந்து (16), சரண் (36) உள்பட13 போ் காயமடைந்தனா். இவா்களில் மீனாட்சி (59), கவிதா (50), ஷாலினி (33) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து அவா்கள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.