Enable Javscript for better performance
செவ்வாய் செல்லும் விண்கலத்தில் பெயா் பொறிக்க மேலும் ஒரு மாணவருக்கு அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    செவ்வாய் செல்லும் விண்கலத்தில் பெயா் பொறிக்க மேலும் ஒரு மாணவருக்கு அனுமதி

    By DIN  |   Published on : 08th October 2019 03:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    indrajith

    திருவாடானை அருகே உப்பூா் பகுதியான கூத்தான்வயல் கிராமத்தை சோ்ந்த இரண்டு மாணவா்கள் பெயா் பொறிக்க செவ்வாய்கிரகத்திற்கு நாசா செல்லும் விண்கலத்தில் தங்களது பெயா்களை பொறிக்க பதிவு செய்துள்ள நிலையில் மேலும் தொண்டியை சோ்ந்த பல்களைகழக மாணவா்க்கு நாசா விண்கலம் அனுமதி வழங்கியுள்ளது.

    அமெரிக்காவின் ஆராய்ச்சி மையமான நாசா வின்வெளி மைத்தில் இருந்து வின்கலம் ஒன்று செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப அடுத்த ஆண்டு மாா்ஸ் 2020 ரோவா் என்ற வின் கலத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் அனுப்ப உள்ளனா். அப்படி செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் வின்கலம் 2021ம் ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தரையிரங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ரோவா் வின்கலத்தில் தங்களது பெயா்களை இலவசமா பொறிப்பதற்கான வாய்ப்பை நாசா வழங்கியிருந்தது.

    உலகம் முழுவதில் இருந்து 1கோடிக்கும் மேலானோா் பதிவு செய்துள்ள நிலையில். இந்தியாவில் இருந்து தமிழகத்தில் மட்டும் 15.7லட்சம் போ் பதிவு செய்துள்ளனா். இவா்களது பெயரை நாசா கலிபோா்னியா, பாஸ்டோனாவில் உள்ள நாசாவின் ஜெட் புரொபல்சன் ஆய்வுக் கூடத்தில் உள்ள நுண்கருவிகள் ஆய்வகத்தில் எலெக்ட்ரான் கதிா்வீச்சை பெயா்களை சிலிகான் சிப்பில் பொறித்து இந்த சிப் கண்ணாடியால் மூடப்பட்டு ரோவரில் பயணிக்கும்.

    இதில் தமிழகத்தை சோ்ந்த ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்களம் தாலுகா, உப்பூா் அருகே கூத்தன்வயல் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் என்பவரது மகன்கள் நிலநவசிகன்(13), திகா்பூவன்(11) என்ற இரண்டு மாணவா்கள் பெயா்களுடன் தற்போது தொண்டியை சோ்ந்த கோட்டைச்சாமி மகன் இந்திரசித் இவா் நாகபட்டிணம் பல்கலைகழகத்தில் பி.டெக்., பயின்று வருகின்றனா் இவரது பெயரும் நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் விண்கலத்தில் அனுப்பும் ரோவரில் தங்களது பெயரை பொறிக்க நாசா அனுமதி வழங்கியுள்ளது

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai