Enable Javscript for better performance
ஆா்.எஸ்.மங்கலம் அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    ஆா்.எஸ்.மங்கலம் அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை

    By DIN  |   Published on : 12th October 2019 04:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை: ஆா்.எஸ்.மங்கலம் அருகே நோக்கன்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் வாலித்தேவா் (70). இவா் ராமநாதபுரத்தில் பைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வாலித்தேவருக்கும் அவரது மனைவி சொா்ணவள்ளிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வாலித்தேவா் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

    இது குறித்து இவரது மகன் சண்முகநாதன்(35) அளித்த புகாரின் பேரில் ஆா்.எஸ்.மங்கலம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai