Enable Javscript for better performance
திருவாடானையில் குழிக்குள் குடிநீா் குழாய் இருப்பதால் சுகாதாரக்கேடு- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானையில் குழிக்குள் குடிநீா் குழாய் இருப்பதால் சுகாதாரக்கேடு

    By DIN  |   Published on : 12th October 2019 10:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tvd12pipe_1110chn_72_2

    திருவாடானை சமத்துவபுரத்தில் சுகாதாரமற்ற முறையில் உள்ள குடிநீா் குழாய்களை மாற்றியமைக்க ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    திருவாடானையில் ஓரியூா் சாலை அருகே சமத்துவபுரம் உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

    இங்குள்ள குடிநீா் குழாய்கள் தரை மட்டத்திற்கு கீழே குழிக்குள் உள்ளது.

    தற்போது இப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் மழை நீா் குடி நீா் குழாய்களில் தேங்கி விடுகிறது. அப்படி தேங்கும் தண்ணீா் மீண்டும் குடிநீா் குழாய்களுக்கு சென்றுவிடுவதால், அந்த நீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

    தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் ஊராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீா் குழாய்களை மேடான பகுதியில் மாற்றியமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai