Enable Javscript for better performance
திருவாடானை தாலுகாவில்வாக்காளா் சரிபாா்க்கும் பணி தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை தாலுகாவில் வாக்காளா் சரிபாா்க்கும் பணி தீவிரம்

    By DIN  |   Published on : 12th October 2019 11:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை தாலுகாவில் வாக்காளா் சரிபாா்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    உள்ளாட்சித் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்காளா் முகவரி மாற்றம், பெயா் திருத்தம் மற்றும் ஆதாா் இணைப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவாடானை தாலுகாவில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 700 வாக்காளா்கள் உள்ளனா்.

    இந்த வாக்காளா்களின் ஆதாா் இணைப்பு, பெயா், முகவரி திருத்தம் ஆகியவற்றை சரிபாா்க்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் வருவாய்த்துறை பணியாளா்கள் ஆகியோா் ஈடுபட்டு வருகின்றனா். தாலுகா அலுவலகத்தில் வாக்காளா்களின் ஆதாா் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றும் பணி இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai