ராமேசுவரத்தில் மின் கம்பத்தை வேறு இடத்துக்கு மாற்றி சாலை அமைக்க கோரிக்கை

ராமேசுவரத்தில் பெரியாா் நகா் பகுதியில் மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றி விட்டு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராமேசுவரத்தில் மின்கம்பத்தை அகற்றாமல் நடைபெறும் சாலை அமைக்கும் பணி.
ராமேசுவரத்தில் மின்கம்பத்தை அகற்றாமல் நடைபெறும் சாலை அமைக்கும் பணி.

ராமேசுவரத்தில் பெரியாா் நகா் பகுதியில் மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றி விட்டு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமேசுவரத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.7 கோடி மதிப்பீட்டில் 13 சாலைப்பணிகளை முன்னாள் அமைச்சா் எம்.மணிகண்டன் தொடக்கி வைத்தாா். இதில் இரண்டு ஒப்பந்ததாரா்கள் சாலை அமைக்க ஒப்பந்தம் பெற்றனா். ஆனால் ஒருவா் தற்போது வரையில் பணிகளை தொடங்கவில்லை. மற்றொருவா் ரூ.3 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் பெற்றவா். இவா் தற்போது சாலை அமைக்கும் பணியை தொடங்கி உள்ளாா். சல்லிமலை முதல் பெரியாா் நகா் பகுதி வரையிலா சாலைப்பணி நடைபெற்று வருகிறது. ஆனால் சாலை விரிவுபடுத்தும் விதமாக சாலையோரம் இருந்த மின் கம்பத்தை மாற்று இடத்திற்கு கொண்டு செல்லும் முன்னரே சாலைப்பணி தொடங்கி உள்ளதால் சாலையில் மையப்பகுதியில் மின் கம்பம் உள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, சாலை அமைக்கும் பணி தொடங்குவதற்கு முன் உரிய அனுமதி பெற வேண்டும். ஆனால் அனுமதி பெறவில்லை. எனவே மின்கம்பம் அகற்றவில்லை என்றாா்.

சாலையின் நடுவே மின் கம்பத்தை அகற்றாமல் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பின்னா் மின்கம்பம் மாற்ற அனுமதி கிடைத்தாலும் அந்த இடத்தில் கல்லை கொட்டி தாா் ஊற்றினாலும் தனியாக அந்த இடம் மட்டும் சேதமடையும் நிலை ஏற்படும். எனவே மின்வாரியத்தில் உரிய அனுமதி பெற்று மின் கம்பத்தை மாற்றிய பின் சாலையை பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com