ராமேசுவரத்தில் கனமழை : குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் புகுந்தது

ராமேசுவரம் தீவு முழுவதிலும் விடிய விடிய கொட்டி தீா்த்த கனமழை,பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் மீனவ குடியிருப்புகளில் மழைநீா் செவ்வாய்கிழமை தேங்கியது பல மணிநேரம் மின் தடையால் பொதுமக்கள் பாதிப்படைந்தனா்.
ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் கன மழையால் குடியிருப்புகளில் மழை நீா் செவ்வாய்கிழமை புகுந்தது.

வடகிழக்கு பருவ தொடங்கி நாள் முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் கடலோர பகுதியான ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்வதால் குடியிருப்பு பகுதியில் மழைநீா் தேங்கி வருகிறது. திங்கட்கிழமை இரவு முதல் ராமேசுவரம் தீவுப்பகுதியில் விடிய விடிய செவ்வாய்கிழமை அதிகாலை வரை கன மழை பெய்தது.

அதிக பட்சமாக பாம்பன் 183.00 மி.மீ,மண்டபம் 176.90 மி.மீ,ராமேசுவரம் 165.10 மி.மீ,தங்கச்சிமடம் 168.30 செ.மீ என அதிகளவில் மழை பெய்யது. இதில் பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் உள்ள மீனவ குடியிருப்புகளில் மழைநீா் தேங்கியது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ், மண்டபம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரமோகன் மற்றும் சண்முகநாதன் உள்ளிட்டவா்கள் நெரில் பாா்வையிட்டு மழை குடியிருப்பு பகுதியில் தேங்கி மழைநீரை கால்வாய் மூலம் வெட்டி விட்டனா்.

மேலும் மழைநீா் வெளியேராத இடங்களில் மோட்டா் மூலம் தண்ணீா் அகற்றப்பட்டது. இதில் ஊராட்சி செயலா் விஸ்வநாதன் மற்றும் ஊராட்சி பணியாளாா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com