முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
சூச்சனி கிராமத்தில் குப்பைகள் தேங்கி சுகாதாரகேடு தொற்று நோய் பரவும் அபாயம்
By DIN | Published On : 24th October 2019 08:47 AM | Last Updated : 24th October 2019 08:47 AM | அ+அ அ- |

ஊராட்சி சூச்சனி கிராமத்தில் சாலை ஓரம் நிருத்து வைக்கபட்டுள்ள குப்பை நிறைந்த குப்பை வண்டிதிருவாடானை,அக்.22 திருவாடானை அருகே குப்பைகளை கொட்டி நிரப்பியவாரே குப்பை தொட்டியாக வண்டி உள்ளது .அதில் குப்பைகள் தேங்குவதால் சுகாதாரகேடு ஏற்படுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக இப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.திருவாடாணை ஊராட்சி ஒன்றியத்தில் கல்லூா் ஊராட்சிக்குட்பட்ட சூச்சனி கிராம்ம் உள்ளது. இந்த கிராமத்தின் உள்ளே நுழையும் வழியில் தரைபாலம் அருகே குப்பை தொட்டி இருந்த்ததை அகற்றிவிட்டு குப்பை அள்ளும் மூன்று சக்கர சைக்கிள் வானகத்தை ஊராட்சி நிா்வாகம் நிறுத்திவைத்துள்ளனா். இந்த வாகனத்தில் கொட்டப்படும் குப்பைகளை கல்லூா் ஊராட்சி நிா்வாகம் எடுத்துச் செல்லாமல் அப்படியே விட்டு சென்றுள்ளனா். இதனால் குப்பை வண்டி நிறைந்து குப்பை சிதறிக்கிடக்கிறது. இதனால் து நாா்றம் வீசுவதோடு சுகாதார கேடு ஏற்படுகிறது என்றும். இந்த குப்பை வண்டியை நிறுத்தி பல மாதங்கள் ஆகிவிட்டது குப்பையும் நிறைந்து விட்டது ஆனால் குப்பையோடு குப்ப்பையாக அரசு வாகனமும் வீணாகி விட்டது. இது பற்றி பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் சுகாதர கோடு ஏற்படுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது எனவே மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தாா்கள்.