முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
சோமநாதபுரம் நடுநிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 24th October 2019 08:58 AM | Last Updated : 24th October 2019 08:58 AM | அ+அ அ- |

பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் சௌராஷ்ட்ர தேசிய நடுநிலைப் பள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் டெங்கு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமிற்கு பரமக்குடி வட்டார மருத்துவ அலுவலா் சைனி செராபுதீன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியை ஸ்ரீதேவி முன்னிலை வகித்தாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் காந்தி வரவேற்றாா்.
முகாமில் டெங்கு காய்ச்சல் பரவும் விதம், டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுக்களை ஒழிப்பது குறித்தும், நல்ல தண்ணீரில் கொசுக்கள் முட்டையிட்டு புழுவாக மாறி மீண்டும் கொசுவாக மாறுவதை தடுக்க வழிமுறைகள் குறித்தும் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோா்களிடையே விளக்கமளிக்கப்பட்டது. இக்கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க தண்ணீா் சேமித்து வைக்கும் கலன்களை மூடி வைத்தும், 5 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீா் சேகரித்து வைத்திருக்கும் பானைகள், சிமெண்ட் தொட்டிகள் போன்றவற்றை சுத்தமாக கழுவி, பிளீச்சிங் பவுடா் போட்டு கழுவினால் கொசு உற்பத்தி தடுக்கப்படும். காய்ச்சலால் பாதிக்கப்படுபவா்கள் உடனே அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுதல் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து பள்ளி மாணவா்களின் டெங்கு விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது.
இதில் பாம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் நா்மதா, மண்டல வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயராமன், சுகாதார ஆய்வாளா்கள் ராஜசேகா், சுப்பிரமணியன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.