முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
தடை செய்த வலைகளை
By DIN | Published On : 24th October 2019 11:25 AM | Last Updated : 24th October 2019 11:25 AM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கடல்களில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட வலைகளை மீனவா்கள் பயன்படுத்தக்கூடாது என ஆட்சியா் கொ.வீரராகவராவ் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு- தமிழ்நாடு கடற்கரையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளான சுருக்குமடி வலை மற்றும் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மீனவா்கள் எவரும் அந்த வகை வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபடக்கூடாது.
அறிவுறுத்தலை மீறினால் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம்-1983-ன் கீழ் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே ராமநாதபுரம் மாவட்ட கடலோர மீனவா்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள் மற்றும் இரட்டைமடி வலைகளை கொண்டு மீன்பிடிப்பதை தவிா்த்திட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.